உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் பல்கலைக்கழக கல்விக்கு ஆயத்தப்படுத்துவதையே சாதனா 2020 நோக்கமாக கொண்டுள்ளது. தொடக்கக் கல்லூரி அல்லது பல்துறைக் கல்லூரி முடித்த மாணவர்களுக்கு, பல்கலைக்கழகத்தில் எதை எதிர்பார்க்கலாம் மற்றும் எத்தகைய வேறுபாடுகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும் போன்ற ஐயங்களுக்கு ஆலோசனைகளை வழங்குவதையே எங்கள் இலக்காகக் கொண்டுள்ளோம். அதன் மூலம், அவர்கள் பல்கலைக்கழகத்தில் எதிர்கொள்ளக்கூடிய புதிய சவால்களைச் சமாளிக்க அவர்கள் சிறந்த நிலையில் இருப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.

 

இவ்வனைத்தையும் உள்ளடக்கிய ஒரு மின்-தொகுப்பின் மூலம் எங்கள் இலக்கை அடைய முடியும் என்று நம்புகிறோம். NUSஇல் ஒரு கல்வி தவணையில் என்ன எதிர்பார்க்கலாம் மற்றும் அதில் உள்ள வெவ்வேறு பகுதிகளை எவ்வாறு அணுக வேண்டும் என குறிப்பிட்டுள்ளோம். பாட உதவிக்குறிப்புகள், குடியிருப்பு வாழ்க்கை, இணைப்பாட நடவடிக்கைகள் போன்ற பலவற்றைப் பற்றி முன்னாள் மாணவர்களிடமிருந்து நேரடியான ஆலோசனையும் இத்தொகுப்பில் காணலாம். நாங்கள் மாணவர்களுடன் டெலிகிராம் மூலமாகவும் தொடர்புகொள்வோம். இச்செயலி மாணவர்களுக்கு NUSஇல் கல்லூரி வாழ்க்கை குறித்து ஏதேனும் கேள்விகளைக் கேட்க ஒரு தளமாக அமையும். மேலும் இதன் வழியாக நாங்கள் அவர்களுடன் நேரடியாக கலந்துரையாட இயலும்.