NUS Tamil Language Society is releasing a special E- Publication in commemoration of it’s 45th anniversary. This E-Publication will comprise both academic and opinion-based papers from writers of different backgrounds that will be covering a wide variety of topics and themes pertaining to the Tamil community in Singapore. These topics are from the 6 overarching pillars of Leadership, Education, Arts and Culture, Community Work, Politics and Digital Tamil.
It will be launched and be available for the public to view on our official NUSTLS website. We hope that this compilation will bring about a greater awareness about the communal issues in Singapore’s Tamil Community and allows for the learning of the different perspectives of the issues from the members of the public who have volunteered to contribute to our E-Publication.
தேசிய பல்கலைக்கழக தமிழ்ப் பேரவை, அதன் 45-ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, ஒரு சிறப்பு மின்னூலை வெளியிட்டது. சிங்கப்பூர் தமிழ் சமூகம் தொடர்பான பல்வேறு தலைப்புகள் மற்றும் கருப்பொருள்களை உள்ளடக்கிய இந்த மின்னூல் பலதரப்பட்ட பின்னணிகளிலிருந்து துளிர்த்திருக்கும் எழுத்தாளர்களால் எழுதப்பட்டது. இந்த மின்னூல், தலைமைத்துவம், கல்வி, கலையும் கலாச்சாரமும், சமூக சேவைப் பணிகள், அரசியல் மற்றும் தொழில்நுட்பம் வாயிலாக தமிழ் ஆகிய 6 தூண்களைச் சார்ந்த கருத்துகளைக் கொண்டிருக்கும்.
வெளியிடப்படும் இந்த மின்னூலைப் பொதுமக்கள், தேசிய பல்கலைக்கழக தமிழ்ப் பேரவையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணலாம். இத்தொகுப்பு சிங்கப்பூர் தமிழ் சமூகத்தினரிடையே நேரிடும் பிரச்சினைகள் குறித்து அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று நம்புகிறோம். எங்கள் மின்னூலை வடிவமைப்பதற்குத் தங்களது கருத்துகளைப் பகிர முன்வந்த எழுத்தாளர்கள், இப்பிரச்சினைகளை எவ்வாறு கண்ணோட்டமிடுகிறார்கள் என்பதைப் பதிவுச் செய்யவும் இது ஒரு சிறந்த தளமாக அமைந்தது.
