தலைவரின்
உரை
 
PRESIDENT'S MESSAGE

தமிழ் பிரியரிகள் அனைவருக்கும் என் முதற்கண் வணக்கங்கள்.

 

1975ம் ஆண்டில் தோன்றியதிலிருந்து, 44 ஆண்டுகளாக சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை, தமிழ்மொழியின் வளர்ச்சி மற்றும் இந்திய சமுதாயத்தின் முன்னேற்றத்தை தன் மைய குறிக்கோள்களுக்கு இணங்க பற்பல திட்டங்களை செயற்படுத்தி வருகின்றது என கூறுவதில் நான் பெருமை கொள்கிறேன்.

 

1984இல் சாதனா ‘ஏ’ நிலை துணைப்பாட திட்டப்பணியிலிருந்து தொடங்கி, 1987லில் ஈராண்டிற்கு ஒரு முறை சங்கே முழங்கு மேடை நாடக படைப்புகள் மற்றும் தமிழ் இளையர் மாநாட்டுகளை தமிழ்ப் பேரவை அபாரமான துடிப்புடனும் ஆற்றலுடனும் நடத்தி வருகின்றது.

 

இவற்றுடன் ஆண்டுதோரும் “Sports Spectra” என்னும் விளையாட்டு விழாவையும் தமிழ்மொழி வளர்ச்சிக்கழகத்துடன் இணைந்து யுத்தம் என்னும் மொழி வளப்போட்டியையும் ஏற்பாட்டு செய்து வருகின்றது என சொன்னால் மிகையாகாது. மேலும், இந்திய சமுதாயதிற்கு கூடுதலாக கைகொடுக்க வேண்டும் என்னும் எண்ணத்தில் 39-ஆம் செயற்குழு சமூக சேவை திட்டக்குழு ஒன்றைத் தொடங்கி பொங்கல் கலாட்டா மற்றும் முதியோர் ஓவிய திட்டப்பணி போன்ற நடவடிக்கைகளை ஏற்பாடு செய்து சமூகத்தை ஒருகிணைப்பதுடன் பல்வேரு குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கு உதவி கரம் நீட்டி வருகின்றது.

 

எங்களுடைய அனைத்து முயற்ச்சிகளிலும் ஆதரவளித்த எல்லா நல்லுளங்களுக்கு பேரவை அதன் நன்றியைத் தெரிவித்துக்கொள்வதுடன் தொடர்ந்து பல தரமான திட்டப்பணிகளில் ஈடுபட்டு தமிழ் வளர்ச்சிக்கும் சமுதாயத்திற்கும் அதன் சேவையை ஆற்ற உறுதிக்கூறுகிறது.

 

எழுச்சியில் பிறந்த இளந்தீ!

 

My heartfelt greetings to all Tamil enthusiasts,
 

Ever since its conception in 1975, I am proud to say that National University of Singapore Tamil Language Society (NUS TLS) has been organizing various projects that strongly aligns itself to its key objectives of developing Tamil language and being a catalyst for progress in Indian community for the past 44 years.


NUS TLS had been running its projects starting from a Saadhana ‘A’ Level Tuition project in 1984, now revamped into Saadhana Mentorship programme, and biennial project such as, Sangae Muzhangu, the theatre production since 1987, and Singapore Tamil Youth Conference with exceptional passion and competence. 
 

On top of these, every year, NUS TLS organizes a sports tournament called “Sports Spectra” and a language promoting event in collaboration with Tamil Language Council called “Yutham-Kalam”. Furthermore, in order to aid the community better, the 40th Executive Committee also engages in community development programmes through a directorate called Community Service Project Directorate. This directorate has carried out events such as Pongal Galatta and ‘Varnam’, an elderly art tote bag designing project to forge greater cohesion within the society and also help those in need.


While I extend my sincere gratitude to all the kind hearts who have been supporting us throughout all our efforts, I would also like to promise that NUS TLS will continue to engage in quality projects and promote the usage of Tamil and extend its service to the community.

 

 

குப்பன் சொக்கலிங்கம்           Kuppan Chockalingam
தலைவர்                                 President

40-ஆம் செயற்குழு                  40th Executive Committee
NUS தமிழ்ப் பேரவை               NUS Tamil Language society