This Infomedia project is a 5-part series of short videos on some of the events that TLS has embarked on over the last 45 years. The 5 parts featured on these videos are namely Sports Spectra, Conferences/Seminars, Sangae Muzhangu, Saadhana and other Language-Based Events. These videos highlight the legacy of these events and feature interview clips from our Alumni. We hope that these videos can be a trip down memory lane for members from past committees as well as give an insight on the activities that we do here at TLS to new viewers.
இந்த 5 பாக காணொளி தொடர், கடந்த 45 ஆண்டுகளாக தமிழ் பேரவை ஈடுபட்டுள்ள முயற்சிகளின் தொகுப்பாகும். இத்தொகுப்பின் ஐந்து பாகங்கள் - நமது வருடாந்திர "Sports Spectra" விளையாட்டுப் போட்டிகள், மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள், நமது நாடக படைப்பான "சங்கே முழங்கு" , சாதனா துணைப்பாட நடவடிக்கைகள், மற்றும் மொழி சார்ந்த நிகழ்வுகள் என்பவையே ஆகும். இந்த காணொளிகள் நமது 45 ஆண்டு கால சேவையை, புகைபடங்கள் மற்றும் முன்னாள் மாணவர்களுடனான பேட்டிகள் போன்றவற்றின் உதவியுடன் மிகவும் துல்லியமாகவும் சுருக்கமாகவும் காட்டுகின்றன. இக்காணொளிகளைக் காணும் பேரவையின் முன்னாள் உறுப்பினர்களுக்கு இது பல சுவாரசியமான தருணங்களை நினைவூட்டும் என்றும், புதிதாக காண்போருக்கு நாம் NUS தமிழ் பேரவையில் எவ்வகையான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறோம் என்பதை காட்டும் என்றும் நாங்கள் நம்புகிறோம்.
