For the Gala Celebrations this year, we have gotten our very own alumni members, NUS organisations, as well as some local talents and artists on board to put together a variety of performances for us. With alumni members Mr Karthikeyan Somasundaram and Mr Saravanan Ayyavoo having us entertained with their comedy skit that will bring us down memory lane, we also have local bands ‘Karrymix’ and ‘Isaination’ with an acoustic melody for us. In addition, we have our very own NUS Organisation NUS IIE with an instrumental cover to start off the celebrations, and previous Sangae dancers Shruthi Nair, R Sweathha and Janaki H Nair with a classical Indian Dance cover choreographed entirely from scratch. Gala thus holds an important place in this year’s TLS45th celebrations as it proudly provides an open platform for local artists to showcase their talents while we celebrate the achievements that our organisation has brought about in the Tamil Language industry.
இவ்வாண்டின் “Gala” கொண்டாட்டங்களை முன்னிட்டு, வெவ்வேறு சுவாரசியமான நிகழ்ச்சிகளைப் படைப்பதற்காக, தேசியப் பல்கலைக்கழகத்தோடு தொடர்பு கொண்ட நிறுவனங்கள், எங்கள் மும்மாணவர்கள் மற்றும் உள்ளூர் கலைஞர்கள், ஆகிய முக்கிய நபர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். பல்கலைக்கழகத்தின் பிரபலமான மும்மாணவர்களான திரு. கார்த்திகேயன் சோமசுந்தரம் மற்றும் திரு. சரவனன் ஐயாவூ, காணும் பலரை நினைவுப் பாதையில் செலுத்த, ஒரு அற்புத நகைச்சுவை நாடகத்தைப் படைத்துள்ளனர். அதோடு, உள்ளூர் இசைக் குழுவினரான ‘Karrymix’ மற்றும் ‘Isaination’, ஓர் இன்னிசைப் பாடலை வாசிக்கவுள்ளனர். நிகழ்ச்சியைத் துவக்கி வைப்பதற்காக தேசியப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ‘IIE’ இசைக்குழு நடத்தவிருக்கும் சங்கீத நிகழ்ச்சியோடு, முன்னைய சங்கே நடனர்களான ஷுருதி நாயர், ரா. சுவேதா மற்றும் ஜானகி நாயர் ஆகியோர், சுயமாக உருவாக்கிய பாரம்பரிய இந்திய நடனக்கலையைக் காட்டவுள்ளனர். உள்ளூர் கலைஞர்களின் உண்மையானத் திறனை வெளிக்கொணர வழிவகுக்கும் தளமாகவும், தமிழ் மொழிக்காக எங்கள் பேரவை ஆற்றியுள்ள சேவைகளைக் கொண்டாடும் தளமாகவும் இருப்பதால், தமிழ்ப் பேரவையின் நாற்பத்தி ஐந்தாம் ஆண்டின் கொண்டாட்டங்களில் ‘Gala’ ஓர் முக்கிய அங்கமாக விளங்குகிறது.
