சமூக சேவைத் திட்டக் குழு (CSPD), அப்பேருக்கேற்றவாறு, இந்தியச் சமூகத்திற்குச் சேவைப் புரியும் எண்ணத்தோடு, பலத் திட்டங்களைச் செயல்படுத்தும் குறிக்கோளோடு பணிபுரிகிறது. ஐந்து உறுப்பினர்கள் கொண்ட எங்கள் குழு, HEB ஆஷிரம்த்தின் குடியிருப்பாளர்களை முதலில் குறி வைத்து எங்கள் திட்டத்தைத் தொடங்க முற்பட்டோம். 

 

அவர்கள் மீண்டும் வேலை வாய்ப்புகள் பெறுவதற்குத் தேவையான மென்மையான மற்றும் கடினமானத் திறங்களை மேம்படுத்தும் திட்டங்கள், Covid 19 கிறுமித்தொற்றால் நடந்தேறவில்லை. ஆனாலும், சேவைப் புரியும் குறிக்கோளை நாங்கள் பூர்த்தி செய்தோம். எடுத்துக்காட்டாக, PGP குடியிருப்புத் தளங்களில் தற்காலிகமாக வாசம் செய்யும் வெளிநாட்டு ஊழியர்கள், தங்களது பொழுதைப் பயனுள்ள வகையில் கழிக்க, ஓர் கதை சொல்லும் போட்டிக்கானத் திட்டத்தை தற்போது உருவாக்கியுள்ளோம். சிங்கை- ஆங்கில மொழியில் உரையாடல் நிகழ்த்த கற்றுக்கொடுக்கும் சிறியப் பாடங்களிற்கான மொழிப்பெயர்ப்பிலும் நாங்கள் பங்கெடுத்தோம். ஆதலால், நம் சமூகத்திற்கு நன்மை பயக்குமாறு பணி செய்வது, இன்னும் எங்கள் முக்கியக் குறிக்கோளாக விளங்குகிறது.