எங்களைப்
பற்றி
 
WHO WE ARE

சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை, மார்ச் மாதம் 1975ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. சிங்கப்பூரில் தமிழ் மொழியையும் பண்பாட்டையும் வளர்ப்பதே அதன் முன்னணி நோக்கமாக இருந்தது. மேலும், இந்நாட்டில் இருமொழித் திறனை வளர்க்கவும், தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு துணைபுரியவும், நம் நாட்டின் அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றாக அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்ட தமிழ்மொழியின் மேம்பாட்டுக்குப் பங்காற்றவும் சிங்கப்பூர்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி அமைப்பு ஒன்று நிறுவப்படவேண்டும் என்று பலராலும் முடிவுசெய்யப்பட்டது. சிங்கப்பூர்ப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை தன் நிகழ்ச்சிகள் யாவும் சாதனைகளாகத் திகழவேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படத் துவங்கியது. தமிழ்ப் பேரவை அன்று தொடங்கிய 'சிங்கப்பூரில் தமிழ் மொழி' இலக்கியம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட கருத்தரங்கை நடத்துதல், 'தமிழ்ப் பேரவை' என்னும் பதிப்பை ஆண்டுதோறும் வெளியிடுதல், பல்கலைக்கழகப் புகுமுக வகுப்பு மாணவர்களுக்கான துணைப்பாட வகுப்புகளை நடத்துதல் போன்ற நடவடிக்கைகளை இன்றளவும் சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை சீரிய முறையில் தொடர்ந்து செய்துவருகிறது.

 

இனி வரும் ஆண்டுகளில் இந்திய சமூகம் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற இளையர்களின் கண்ணோட்டத்தைப் பற்றி கலந்துரையாடவும் கருத்து பரிமாறவும் தமிழ்ப் பேரவை ஒரு தளமாக விளங்குகிறது. பெருமித வளர்ச்சி கண்டுள்ள தமிழ்ப் பேரவை, 2012ம் ஆண்டு வரலாற்றிலேயே முதன் முறையாக உலகப் பல்கலைக்கழகத் தமிழ் இளையர் மாநாட்டை ஏற்பாடு செய்தும் 2013ம் ஆண்டு அதன் 'சங்கே முழங்கு' மேடை நாடகத்தை எஸ்பிளநேட் அரங்கில் நடத்தியும் சாதனை புரிந்துள்ளது.

 

 

The NUS Tamil Language Society (NUSTLS) was founded in March 1975 to promote the Tamil language and culture in Singapore. In order to promote bilingualism, and in order to innovate the literary heritage of Tamil writings in Singapore, and so help the nation in promoting one of the official languages enshrined in its constitution, it was agreed by all that the Tamil Language Society should be founded in the University of Singapore, not only to cater for academic and literary pursuits but also to inculcate at least amongst those who came within the ambit of the Society the spirit of sacrifice and service to the well being of Singapore. Within a month of its formulation, the Society organized the Freshman Tea in 1975, and for the first time in the history of the University of Singapore's Rag & Flag Day, it put up a colorful float, depicting the ancient Tamil epic, "Chillappattikaram". In order to establish monuments out of projects, rather than organize functions as done by any normal students society, the Society decided on a 'Seminar Conference on Tamil Language and Tamil Literature in Singapore', and annual academic journal by the name of 'Tamil Peravai', and a free tuition scheme for Pre-U two students, all the projects being actively pursued till this date.

 

Today, NUSTLS serves as an important platform for Singapore’s Indian community, particularly for the youth, to come together to discuss ideas and exchange views, on how they want to see the community develop over the coming years. Its activities have grown leaps-and-bounds over the years, reaching milestone events such as the first-ever World Tamil University Youth Conference 2012 and Sangae Muzhangu 2013, which was staged at the Esplanade Theatre.